யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்


யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலை கழகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முன்னதாக பல்கலை வளாகத்தினுள் உள்ள பிரதான கொடி கம்பத்தில் கறுப்பு கொடியினை மாணவர்கள் ஏற்றினர்.

பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன் என கேள்வி எழுப்பிய மாணவர்கள், தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது எதற்கு என போராட்டத்தின் போது கேள்வி எழுப்பினர்.No comments