துருக்கி நிலநடுக்கம்: 8000 ஐ அண்மித்த உயிரிழப்பு


தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பின்னர், மீட்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டடுள்ளனர்

இந்த அனர்த்தத்தில் இரு நாடுகளிலும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தரவுகளின் அடிப்படையில்,  7,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் சுமார் 1,932 பேரும் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. 

No comments