மலையில் நிர்கதியான 33 பேர் மீட்பு!


உடுதும்பர நக்கிள்ஸ் சரணாலயத்திற்குட்பட்ட கெரடிகல மலையில் ஏறும் போது வழி தவறிய 33 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மலையேறச் சென்றவர்கள் திரும்ப முடியாமல் வழிதவறிச் சென்றதாக உடுதும்பர பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள், வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அந்த குழுவைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு சிக்கியிருந்த 31 இளைஞர்கள் மற்றும் இரண்டு யுவதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டி, ஹோமாகம, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

No comments