கிளி. அறிவியல் நகரில் பேருந்து , கப் ரக வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து!




கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

தெய்வாதீனமாக குறித்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் , யாழில் இருந்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ,யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதியின் கப் ரக வாகனமும் புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 







No comments