கோண்டாவிலில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற குற்றத்தில் ஒருவர் கைது!


யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை மடக்கி சோதனை செய்த போது , 750 கிராம் போதை கலந்த பாக்கு உடைமையில் இருந்து மீட்கப்பட்டது. 

அதனை அடுத்து சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments