முன்னாள் துணைவேந்தரின் இறுதி கிரியைகள் நாளை ; யாழ்.பல்கலையிலும் அஞ்சலி நிகழ்வுகள்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளது.

கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் நாளைய தினம் செவ்வாய்க் கிழமை இறுதி கிரியைகள் காலை 9.30 மணி முதல் மதியம் 11 மணி வரையில் நடைபெறவுள்ளது. 

அதனை அடுத்து அவரது பூதவுடல், அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மதியம் 11.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக இணுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. 

No comments