மல்லாகத்தில் திருட்டு ; சந்தேகநபரை கைது செய்து நகைகளை மீட்ட பொலிஸார்


யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திருடப்பட்ட நகைகளை இன்றைய தினம் பொலிஸார் மீட்டுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த துரித நடவடிக்கையின் அடிப்படையில், இன்றைய தினம் திங்கட்கிழமை  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வீட்டில் திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர். 

No comments