கொலையாளிகளுடன் கூட்டு வைத்துள்ள சித்தர்?



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்றிலில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

எனினும்  நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் இது திட்டமிட்ட உருமறைப்பு என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா பங்குபற்றியிருந்தார். 

யுhழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசாவினால் திறந்து வைக்கப்பட்ட தூபியை தமிழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்கள நிர்மாணித்திருந்தனர்.நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் மகனுமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கெடுத்திருந்தார்.

இதனிடையே மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா நிகழ்வில் அவரை யார் கொலை செய்தார்களோ அந்த ஆயுதக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் கலந்துகொண்டுள்ளார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழரசுக்கட்சியினர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.


No comments