யாழில். 450 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!


யாழ்ப்பாணம் வடமராட்சி உப்பு வல்லை சந்திப்பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குப்பிளான் வடக்கை சேர்ந்த 28 வயது இளைஞன் 450 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments