தொடரும் தப்பியோட்டம்!



இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்ட இடைவெளியின் பின்னராக மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி - நாச்சிகுடா கடற்கரையில் இருந்து நேற்று காலை சட்டவிரோதமாக படகில் புறப்பட்டுச் சென்று இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையை அவர்கள் சென்றடைந்துள்ளனர். 

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து, கடந்த 20 ஆம் திகதி, மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், இன்று காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர், கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், தற்போது பேசாலை பகுதியில் வசித்து வரும், இளம் குடும்பஸ்தரான, 26 வயதுடைய கஸ்டார் அலெக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் யூனியன் குளம் பகுதியைச் சேர்ந்த கஸ்டார் அலெக்ஸ், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவர், பேசாலையில் குடும்பத்துடன் தங்கி இருந்து, கடந்த சில மாதமாக, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான நிலையில், கடந்த 20 ஆம் திகதி, பேசாலை கடற்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, படகு மூலம், அன்றையதினம் மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.

அப்போது , காணாமல் போன மீனவரின் சடலம், இன்று காலை, பேசாலை மீன்பிடி துறைமுகத்திற்கு மேற்கு பக்கமாக கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.



No comments