14 திகதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இங்கிலாந்து அரசு தடை!


இங்கிலாந்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 14ஆம் திகதி முதல் தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் மக்குவதற்கு 200 ஆண்டுகள் வரையில் ஆகுவதாகவும், அதுவரையில் சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும், இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரசா கபி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஓர் ஆண்டில் மட்டுமே சுமார் 5 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுவதாகவும், அதில், 10 சதவீதம் மட்டுமே மறுபயன்பாட்டிற்கு வருவதாகவும் தெரசா கபி தெரிவித்தார்.

No comments