வவுனியாவில் காவல்துறை உறுப்பினர் வீதியில் சடலமாக மீட்பு!


வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் காவல்துறை உறுப்ப்பினர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டது.

உந்துருளிக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் காவல்நிலையத்தில்  பணியாற்றும் மிகிந்தலை பகுதியினை சேரந்த 45 வயதுடைய காவல்துறை சார்ஜன் வசந்த சந்தன நாயக்க என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments