பான் கீ மூன் இலங்கைக்கு விஐயம்!


ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படடும் என தெரிவிக்கப்படுகின்றது.

தென் கொரியாவின் குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராக உள்ள பான் கீ மூன், அந்த அமைப்பின் சார்பில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்.

மேலும் இலங்கையில் காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments