தேர்தலுக்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில்


உள்ளூராட்சித் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

பெப்ரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேர்தலுக்கு முன்னரான மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டம் குறித்தும் கண்காணிப்பாளர்கள் அவதானம் செலுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments