யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர் ; சபைக்கு சென்றோருக்கு கொரோனோ பரிசோதனை


யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெற்றது. 

குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உறுப்பினர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் ஆகியோரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக் கவசம் அணிவிக்கப்பட்ட பின்னரே உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 யாழ். மாநகர சபையில் - குறிப்பாக மாநகர சபைக் கூட்டத்தின் போது, சபை மண்டபத்தினுள் மட்டும் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டமை உறுப்பினர்களிடையே ஐயத்தையும், விசனத்தையும்  ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபை அதிகாரிகளிடம் வினவிய போது, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் எழுத்து மூல அறிவுறுத்தலுக்கு அமையவே யாழ். மாநகர சுகாதார வைத்திய அதகாரி பணிமனையால் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments