யாழ். மாநகர முதல்வர் தெரிவுக்கு கோரமில்லை!


யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான சமை அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை  வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது. 

அதன்போது  45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையில் சபையை கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது. 

மாநகர முதல்வர் தெரிவையோட்டி மாநகர சபை வளாகத்தில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர். 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற மாநகர உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரையும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.


No comments