காங்கிரஸ் காசு கட்டியது!


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில், கிளிநொச்சியில் பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான வேட்புமனுவை, இலங்கை தமிழரசுக் கட்சி இன்று தாக்கல் செய்தது. கடந்த வாரம் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக கிளிநொச்சியில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இரு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று கிளிநொச்சியில் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக, அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.


No comments