மணி தலைமையில் சுயேட்சைக் குழு ?

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து விலகிய


யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.

 யாழ்ப்பாணம் சேர் பொன் இராமநாதன் வீதியில் உள்ள அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் அக்கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments