நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறதாம்!
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

No comments