யாழில். ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகி கடற்தொழிலாளர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கனான கடற்தொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) எனும் மீனவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி பண்ணை பகுதியில் இறால் பிடிப்பில் ஈடுபட்டு இருந்த வேளை ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

அதனை அடுத்து யாழ்.போதனா வைத்திய சாலையில் 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்ற பின்னர் , வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும் அவரால் பூரணமாக குணமடையவில்லை. 

வீட்டில் ஓய்வில் இருந்த போதிலும் திடீர் சுகவீனங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜெலி மீனின் தாக்குதலின் தாக்கத்தினால் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

No comments