தேர்தல் ஆணையக தலைவர் பதவி விலகுவார்!

 


தேர்தலை பின்போடுமாறான அழுத்தங்களின் மத்தியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் முன்னாள் வடமாகாணசபை ஆளுநருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது பதவியை துறந்துள்ளார். இதேவேளை, தேர்தல் ஆணையகத்தின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவும் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரின் பதவி விலகல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையாகவும் அமையாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்கு மூன்று உறுப்பினர்கள் போதுமானவர்கள் என்றும், ஒருவரின் பதவி விலகலால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது.” என அரசியலமைப்பின் உறுப்புரைகளை மேற்கோள்காட்டி தேசப்பிரியn குறிப்பிட்டுள்ளார்.

"தலைவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கலாம் . அவர்களின் பெரும்பான்மை வாக்குகளுக்கமைய தீர்மானம் நிறைவேறும்'' என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த போதிலும், ஆணைக்குழுவிற்கு செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசியலமைப்பின் சரத்தை மேற்கோள் காட்டி தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார்.



No comments