யேர்மனியில் தொடருந்தில் கத்திக்குத்து: இருவர் பலி! எழுவர் காயம்!

யேர்மனியில் ஓடும் தொடருந்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

ஹம்பர்க் - கீல் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த தொடருந்து ப்ரோக்ஸ்டெட் நிலையத்தை நெருங்கியபோது, அங்கிருந்த பயணிகளைக் குறிவைத்து மர்மநபர் கத்தியால் சரமாரிக் இளைஞன் தாக்கியுள்ளார்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தாக்குதலாளி நாடற்ற பாலஸ்தீனிய இளைஞன் எனத் தொியவருகிறது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.


No comments