தேர்தல் நடந்தே தீரும்!ஜனவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் நிதி ஒழுங்குமுறை சட்டத்திற்கான ஒழுங்குமுறைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு வாரத்திற்குள் தயாரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

சட்டத்திற்கான விதிமுறைகளைத் தயாரிக்க சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்று ஆணையம் முதலில் கூறியது தொடர்பில் நாம் வினவியபோது அதற்கு பதிலளித்த அவர்; வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் செலவழிக்கும் பண வரம்புகள் மட்டுமே விதிமுறைகளாக சேர்க்கப்படும் என்று கூறினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் நேரமின்மையால் மற்ற விதிமுறைகளைத் தயாரிப்பது ஒத்திவைக்கப்படுவதாகவும், சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்ட பின்னர், அடிப்படை விதிமுறைகளை மட்டும் தயாரித்து, அனைவருடனும் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்பட்ட திகதியில் வாக்கெடுப்பை நடத்த ஆணையம் கண்டிப்பாகச் செயல்படும் என்றும் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

No comments