வெட்கங்கெட்ட தமிழ் தரப்பு!

 


பயத்தை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று சொல்லி தேர்தலை கால தாமதம் ஆக்கி மக்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை இன்று மேற்கொள்வதை பார்ப்பதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் அறிவிப்பினால் இன்று தமிழ் கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டு அவர்கள் ஒவ்வொரு கட்சிகளாக உடைந்துள்ளனர்.

மக்களுக்காக விடுதலை பெற்றுக் கொடுக்கப் போகின்றோம் மக்களுக்காக அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கப் போகின்றோம் என்று சொல்லுகின்ற தமிழ் கட்சிகள், இன்று சின்னாபின்னமாகி தங்களுடைய சொந்த இலாபங்களுக்காக பிரிந்து செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

சுதந்திர தினத்திற்குள் அரசியல் பிரச்சனைக்கான தீர்வுகளை வழங்குவேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்., அந்த தீர்வுகள் என்ன அந்த தீர்வுக்காக நாம் என்ன செய்ய முடியும் என்று சொல்லி செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகள் இன்று பிரிந்து நின்று செயல்படுவதனால், தமிழ் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர்.

ஜனாதிபதி சொன்னது பொய்யாகவும் இருக்கலாம் .ஆனால் அந்த வாக்குறுதியைக் கூட செயல்படுத்த முடியாத அளவு நாம் உள்ளோம். ஆகவே இந்த நேரத்திலே நாம் தமிழ் கட்சிகளுக்கு ஒரு அறைகூவல் விடுக்கின்றோம். இது ஒன்றிணைய கூடிய காலம் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு சிறிய தேர்தலாக இருக்கலாம் ஆனால் அதற்கு கூட விலை போகின்றவர்களாக தமிழ் கட்சிகள் இருக்கின்றன.

தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக தேர்தல் சுழலைப்பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொளவதாகவும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.


No comments