மீண்டும் சாபமிடும் சந்தியா!ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று  பிரார்த்தனை செய்துள்ளார். 

கோத்தா கொலையாளியை தண்டிக்க கோரி இந்துகடவுள்களிடம் சரணடைந்துள்ளார் எக்லியாகொட.

முன்னதாக சாபமிட்டு சாம்பல்களை ஜனாதிபதி மாளிகை முன்னர் தூவியதையடுத்து ஜனாதிபதி கதிரையிலிருந்து கோத்தா தப்பித்திருந்தார்.

பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் அவர் பலமுறை மன்றாடினார்.


No comments