தமிழரசு முதல்வர் யார்? தெரியாது! யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் முடிவுகளின் படியே தீர்மானிக்கப்படும்.அதன் பின்னரே முதன்மை வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு வெளிவரும் எனவும் யாழ்.மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழரசு கட்சித் தலைமை யாரை தெரிவு செய்கின்றதோ அவரே யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவிற்கு போட்டியிடுவார் எனவும்  இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்

நான் தான் முதல்வர் அவர்தான் முதல்வர் என தற்போது உள்ள சூழ்நிலையில் கூற முடியாது .ஏனைய கட்சிகள் அவ்வாறு முதன்மை வேட்பாளர் என பெயர்களை பிதெரிவிக்கின்ற போதிலும் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தேர்தல் முடிந்த பிரேரித்துவருகின்ற போதும் தேர்தல் முடிவுகளின் படியே முதன்மை வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு தமிழரரசுக்கட்சியிலிருந்து வெளிவரும் எனவும் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கே.சிவாஜிலிங்கம்,வி.மணிவண்ணன் மற்றும் தீபன் திலீசன் உள்ளிட்டவர்களது பெயர்களை பிரேரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments