இந்தியாவில் இருந்து படகுகளில் 2500 பேர்!

 


யாழ்ப்பாணம் – கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா மார்ச் மாதம் 3, 4ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில்; 8ஆயித்;து 500 க்கும் மேற்பட்ட யாத்திரீகர்;கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2500 பேர் கச்சதீவு திருவிழாவிற்கு செல்லவுள்ளதாக வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார். 

மேலும் ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கச்சதீவு ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

கொரோனா பெருந்தொற்றின் பின்னராக கட்டுப்பாடற்ற நிலையில் இம்முறை யாத்திரீகர்கள் தமிழகத்திலிருந்து அனுமதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னிந்தியாவிலிருந்து கச்சதீவை இந்தியா சுவீகரிக்க வேண்டுமென்ற கோசம் மீண்டும் முதன்மை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments