முகமூடி கும்பலால் கோப்பாயில் ஒருவர் வெட்டிக்கொலை!


யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் 

இன்றைய தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என அழைக்கப்படுவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

முகமூடிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து தப்பித்தனர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments