வடக்கில் கதிரையோட்டம் மும்முரம்!வடக்கு மாகாணசபையில் நாள் தோறும் கதிரைகளிற்கு ஆட்களை மாற்றிவிளையாடுவதை ஆளுநர் பொழுதுபோக்காக முன்னெடுக்கிறாரோவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக உமாமகேஸ்வரன் முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்கிறார்.

இதுவரை கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த வரதீஸ்வரன் விவசாய அமைச்சின் செயலாளராக பதவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இதுவரை விவசாய அமைச்சின் செயலாளராக இருந்திருந்த சிவபாத சுந்தரன் யாழ்.மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments