பிசுபிசுத்தது டக்ளஸ் அன்கோவின் நாடகம்!



கடற்றொழில் அமைச்சின் பின்னணியில் கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் (08) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீதிமன்றம் கைதானவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற சட்டவிரோதமான கடல் அட்டைப் பண்ணைகளுக்கு எதிராக, ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி மீனவ குடும்பங்களுக்கு எதிராக காவல்துறையினர்; வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கானது இன்றையதினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டபோது மீனவர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகியிருந்தார்.

அப்பாவி மீனவர்களுடைய வாழ்வாதாரமும் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டிருக்கின்றபடியால் சட்டவிரோதமாக எந்தவிதமான அனுமதியும் பெறாது அமைக்கப்பட்டிருக்கின்ற கடலட்டை பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் என்று ஜனநாயக வழியில் போராடுகின்றார்கள்.ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை தடு;க்கமுடியாதென சுகாஸ் வாதாடியிருந்தார்.

இன்றையதினம் சந்தேக நபர்களாக முற்படும் தப்பட்ட மீனவர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம் அடுத்த தவணை கடலட்டை பண்ணையாளர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கட்டளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments