வெளியே வரவேண்டாம்:வடக்கு ஆளுநர்!

 


திடீர் காலநிலை காரணமாக  வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையினால்   இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுகின்றது.

இதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போர்; கட்டாயமாக முக கவசம் அணியுமாறுகோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றுமுதல் பகல் முழுவதும் வடக்கில் முழுமையாக பனிப்புகார் போன்று தூசுமண்டலம் பரவியுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக பிரதேசத்து மக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழையுடன் கூடிய குளிர் காற்று வீசுவதனால் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதனிடையே இலங்கையில் இன்று காலை 9 மணிக்கு பின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற  நிலையை எட்டியுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள நிகழ்நேர காற்றின் தர சுட்டெண், மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.


No comments