சீன கைத்தொலைபேசி நல்லது:யாழ்.ஆய்வாளர்கள்!


 

இலங்கைக்கு கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம் என இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆய்வாளர்களாக சொல்லிக்கொள்ளும் சிலர் சீன கைப்பேசிகளுடன் சீன ஆதரவு பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

தூதருடனான சந்திப்பின் போதே புதிய தொலைபேசி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே  சீன மக்களின் நன்கொடையை யாழ் மாவட்ட செயலகத்தில் மக்களுக்கு வழங்கி வைத்த பின்னர் கருத்து வெளியிடுகையில் இலங்கை, சீனா ஆகிய இருநாடுகளும் நண்பர்கள் என்ற வகையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 

பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பு செய்வதற்கான உணவுப்பொதிகளும் எம்மால் வழங்கப்பட்டு வருகின்றதெனவும் தூதர் தெரிவித்துள்ளார்.


No comments