இந்திய வேட்டியல்ல:இது சீன வேட்டி!இலங்கையின் வடபுலம் இந்திய – சீன அரசியல் நகர்வுகளால் திணறிவருகின்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை யார் கையாள்வதென்ற மோதல் இரு நாட்டு  ராஜதந்திர வட்டாரங்களிடையே சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளனர்.

இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் {ஹ வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே கோட்டைக்கு வருகை தந்திருந்தனர்.


No comments