மாவை தலைவராகலாம் ?

 


இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்பட பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் முன்வந்துள்ளன.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சுயநலவாதிகளே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தரப்புகளுக்குள் பிரிவினை இருப்பதால் தான் சிங்கள அரசுகள் எம்மை ஏமாற்ற முடிந்தது. நமக்கு ஒற்றுமை இருக்கின்றது என்பதைக் கண்டால் அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என நம்புகின்றோம்.

இப்போதும் தமிழ்த் தரப்பில் சிலர் தான், தனித்துப் போக வேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளை இயன்ற வரை ஒன்றிணைத்துச் செயற்படவே நாம் முனைகின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட முடிவுகள் பற்றி செய்திகள் வெளியாகின. அந்தச் செயற்குழுவில் உள்ள ஒன்பது பேரில் பெரும்பான்மையானவர்கள் மாவை சேனாதிராஜாவுக்கு எதிரானவர்கள்.

ஜனவரியில் கொழும்பில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு உள்ளது . இது முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடும். இந்த முரண்பாடு ஏற்படுவதற்கு சிலரது சுயநல சிந்தனைகள் தான் காரணம்.

மாவை சேனாதிராஜாவை சிறையில் இருந்து விடுவித்த நீதிபதி நான் தான். ஆனால், இப்போதைய நிலையில் மாவையை எங்கள் தலைவராகக் கொண்டு  விடயங்களை நகர்த்தலாம் என்று தான் சொல்கின்றேன் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனநிலை குழம்பிய சி.வி.விக்னேஸ்வரன் ஆலோசனைகளை மாவை சேனாதிராசா கவனத்தில் கொள்ளக்கூடாதென எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments