தேர்தலிற்கு தயார்!தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது .

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு கொழும்புக்கு அழைத்தது.

ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது.

இந்த மாத தொடக்கத்தில், தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்

No comments