கால்நடை வளர்க்க காசு:வடமாகாணசபை ?வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்து சிந்திப்போர் உதவுமாறு வடக்கு மாகாண கால்நடைகள் சுகாதார வைத்திய சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் காலநிலை சீரின் மையினால் கடந்த வாரம் வடக்கில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வடக்கில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க கூடியதாகவும் இந்த கால்நடைகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடியதாகவும் சில திட்டங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவிலேயே இருக்கின்றது போல கட்டாக்காலி மாடுகளை  ஒரு ஜீவராசிகளாக கணித்து அவர்களுக்கு ஒரு வாழ்விடத்தை கொடுக்க வேண்டும் அவைகளுக்கு உணவை வழங்க வேண்டும் .

மிருகங்களை நாங்கள் வதை செய்யாது அவற்றிற்கு ஒரு பொருத்தமான வாழ்விடத்தை வழங்கும் அதே நேரம் விவசாயம் மற்றும் வீதி போக்குவரத்து போன்றவற்றுக்கு இடையூறு இல்லாதவாறு செய்யக்கூடிய கால்நடைகளுக்கான புகலிடங்கள் அமைக்கப்பட வேண்டும் .

அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் இதற்காக நிறைய நிதி தேவைப்படும் இவற்றுக்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள  உணவை வழங்குவதற்கு போன்றவற்றுக்கு நிறைய நிதி தேவைப்படும்

இவ்வாறு நிலையங்களை நடத்துவதற்கு ஆலயங்கள் ஆலய பரிபாலன சபைகள் மற்றும் இந்து புத்த சமய நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் நபர்கள் முன்வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு தேவையான பூரணஒத்துழைப்பினைவழங்கி அந்த நிலையங்களை நடத்துவதற்கான காணிகள் இனம் கண்டு அவற்றை அவர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது


No comments