உக்ரைனுக்கு பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க அமேரிக்கா முடிவு


உக்ரைனுக்கு அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

300 நாட்களுக்கு மேல் போர் நீடித்து வரும் நிலையில் ரஷியா - உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த உலகின் பல நாடுகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

No comments