கணபதி ஹோமம் :புதிய பாடம்!


மத்திய அரசு பார்த்து பிச்சை போட்டால் தான் உண்டு என்பது தான் மாகாணங்களின் நிதிப் பலம். இந்த நிலையில் மாகாண அமைச்சுகளுக்கு விடுவிக்கப்படும் சொற்ப நிதியை வினைத்திறனாக பயன்படுத்த வேண்டியது மிக மிக  அவசியமானது .அந்த வகையில் மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தனக்கு விடுவிக்கப்படும் பணத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும்  என குரல்கள் வடக்கிலிருந்து எழுந்துள்ளது.

வடக்கில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க கணபதி ஹோமம் வளர்க்க பயிற்சி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ள நிலையில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

இங்கே நலிந்த கலைஞர்கள் தொடர்பான செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது 

வடக்கு மாகாணத்தின் பண்பாடு  முதல் வாழ்வியல் வரையான  நூல்களை மீளுருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது 

வடக்கு மாகாண  சமூகத்தை முன்னிறுத்திய இலக்கியம் , மரபு கவிதைகள், கதைகள் தொடர்பான விரிவான  பயிற்சி பட்டறைகள் , செயலமர்வுகளை நடத்த வேண்டிய அவசியம்  இருக்கின்றது 

மாகாணத்தின் எல்லை கிராமங்கள் வரை சென்று கலை ஆர்வம் மிக்க இளையவர்களை அடையாளம் கண்டு  கலை சங்கமங்களை நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது 

வடக்கு மாகாணத்தின் மொழி  மற்றும் இலக்கிய விருத்திக்கு பங்களிக்க வேண்டி இருக்கிறது 

கலை கலாச்சார நிகழ்வுகள் ஊடக சமூக மற்றும் இன ஒற்றுமைக்கு பங்களிக்க வேண்டி இருக்கின்றது 

வடக்கின் பாரம்பரியமான  கலை கலாசாரங்களை பேணிப்பாதுகாத்து அதை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது 

வடக்கின் பண்பாடு தொடர்பான ஆய்வுச் செயற்பாட்டை ஊக்விக்க வேண்டி இருக்கிறது 

ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளும் மத தளங்களின் தொல்லியலை நிறுவ வேண்டிய கடமை இருக்கின்றது 

தமிழ் சமூக  பண்பாடுகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து பாடசாலை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயலமர்வுகள் மற்றும் போட்டி நிகழ்வுகளைநடத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது  

இவ்வாறு செய்ய வேண்டிய பணிகள் எங்கள் மத்தியில் விரித்து இருக்கின்ற போது பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மத்திய ஒற்றையாட்சி அரசாங்கம் விடுவிக்கும் சொற்ப பணத்தை வெறுமனே கணபதி ஹோமம் பயிற்சி  நெறிக்கு செலவிடுத்தவதற்காக எங்களை சுருக்கி சொல்லுவது எந்தவகையில்  பொருத்தமானது என்று தெரியவில்லை 

இந்திய சுதந்திர தினத்திற்கு வடக்கு மாணவர் மத்தியில் வினாடி வினா போட்டி நடத்த அனுசரணை என்கிற பெயரில் தனது வளங்களை  பயன்படுத்தும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் பரந்து சிந்திக்க வேண்டும் 

குறிப்பாக தமிழ் அரச உத்தியோகஸ்தர்கள் தத்தமது சமூகப் பங்களிப்பு பற்றி யோசிக்க வேண்டும். தமது வேலைத் தளம் சார்ந்து ஆற்றும் உத்தியோகபூர்வ காரியங்களின் அறவொழுக்கம் பற்றி சிந்திக்க வேண்டும்.ஆக்கத் திறனான புதிய சிந்தனை தேவை. திட்டமிடல் வேண்டும். பழையன கழிந்து புதிய மார்க்கம் வேண்டும்.

No comments