போராட்டம் வேண்டும்:டக்ளஸ்!கடலட்டைப் பண்ணைக்கு எதிரான நீதிமன்ற அமர்வு சூடுபிடித்துள்ள நிலையில்  பண்ணைகள் வேண்டுமென கோரி  அரச ஆதரவு தரப்புக்கள் போராட்டங்களை தூண்டிவருகின்றன.

இந்நிலையில யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் ஊடாக அரச ஆதரவு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்திருந்தது. 

பேரணியின் நிறைவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மகஜர் கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. 

இதனிடையே பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் சட்டவிரோத பண்ணைகளிற்கு அனுமதியளித்தமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments