ஒருபுறம் கைது:மறுபுறம் உடலம் கரை ஒதுங்கியதுஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(21) பகல் பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதினொரு மீனவர்களையும் கைது செய்திருந்தனர். 

இதனிடையே வடமராட்சி – ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் அடையாளங்காணப்படாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று புதன்கிழமைபகல் வேளை சடலம் கரையொதுங்கியிருந்தது.


No comments