அச்சுவேலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் ; வீடு, சொத்துக்களுக்கு சேதம்!


யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

அச்சுவேலி தென்மூலை கைத்தொழில் பேட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் மோட்டார் சைக்கிள்களில் வந்து, வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து , வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். 

பின்னர் வீட்டில் இருந்த மீன் தொட்டியை அடித்து உடைத்து , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
No comments