ஊடகவியலாளர்களின் தொழில் நிலை குறித்த ஆய்வு அறிக்கை கையளிப்பு!


உலகளாவிய தொழிற்சங்க திட்டத்தின் கீழ் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங் சம்மேளனமானது இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில்நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு தனித்துவமான கணக்கெடுபொன்றை நடத்தியது.

யாழ்.மாவட்ட மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார், ஊடகவியலாளர்களின் கணக்கெடுப்பு அறிக்கை மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் அடங்கிய 16 காணொளிகளை தொழில் அமைச்சரும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான மனுஷ நாணயக்காரவிடம் கையளித்தார்.

தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகிர்த்தி, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறிலங்காபேலி, தலைவி கிருஷ்ணி கந்தசாமி இஃபாம், பொருளாளர் றிஸ்வான் சேகு முகைதீன், தேசிய ஒருங்கமைப்பாளர்டக்ளஸ் நாணயக்கார உள்ளிட்ட செயற்குழுவினர், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.



No comments