"தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு" - மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம்


யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் "தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு" என்ற பொருளில் அமைந்த பன்னாட்டு கருத்தரங்கம் இன்றைய தினம் வியாழக்கிழமை மதுரையில் ஆரம்பமாகியது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற தொடக்க அமர்வில், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ப. அன்புச்செழியனிடம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க வெளியீடான சங்கப் பேழை என்ற இதழ் வழங்கப்பட்டது. 

தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து நான்கு ஆய்வு அரங்குகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை நிறைவு நிகழ்ச்சியில் நான்கு அமர்வுகளாக ஆய்வரங்கு இடம்பெறுவதோடு பட்டிமன்றம் ராஜா தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் மற்றும் கவிஞர் கு றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களும் ஆர்வலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments