யாழ்.பல்கலை முகாமைத்துவ கற்கை மாணவர்களால் சமுதாய கல்வி செயற்திட்டம் முன்னெடுப்பு!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர் ஒன்றியத்தினால் சமுதாய கல்வி செயற்றிட்டமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்து தம்பி மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட பாடாசலை உபகரணங்கள் பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு பாடசாலை அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட பீடாதிபதி  பேராசிரியர் நிமலதாசன், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட  மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பிரவீன், முகாமைத்துவ பீட  மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





No comments