போட்டிகளில் பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு வரவேற்பு!


அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் சிறைச்சாலை திணைக்களத்தை பிரநிதித்துவப்படுத்தி , போட்டியில் பதக்கங்களை வென்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

யாழ்ப்பாண சிறைச்சாலையில்  இன்றைய தினம் வியாழக்கிழமை , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களால் பதக்கங்களை பெற்ற உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு , கௌரவிப்பும் இடம்பெற்றது. 

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து பங்கு பற்றிய வீரர்களில் ஈட்டி எறிதல் போட்டியில், எஸ். சியானியஸ் தங்க பதக்கத்தையும்,  உயரம் பாய்தல் போட்டியில், யூட் பீரிஸ் வெள்ளிப்பதக்கத்தையும் , குண்டு எறிதல் போட்டியில் ரி.சி. அன்ரு வெள்ளி பதக்கம் மற்றும் தட்டெறிதலில் வெண்கல பதக்கத்தையும் , 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் எச்.ஜே. அபேயரத்தனா வெண்கல பதக்கத்தையும் , ஜே. றொகான் 4 X 400 மீற்றர் அஞ்சல் ஓட்ட போட்டி மற்றும் 4 X 100 ஆகிய போட்டிகளில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். 

No comments