யாழ். போதனாவில் ராஜ் ராஜரட்ணம்!


இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 2006 ஆண்டில் ராஜ் ராஜரட்ணத்தின் நிதி உதவியில்  இருதய சரித்திர சிகிச்சை பிரிவு எகோ இயந்திரம் உட்பட பல சேவைகளை புதிதாக  ஆரம்பிக்க பெரும் உதவியாக இருந்ததென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

அமெரிக்க உள்ளக  தகவல்களை முறையற்ற விதத்தில் பெற்று, அமெரிக்க பங்குச்சந்தைக்கு வழங்கியதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு , விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் , கடந்த 2019ஆம் ஆண்டு 08 வருட கால சிறைத்தண்டனையுடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு , 2 வருட சிறைத்தண்டனை காலத்தை வீட்டில் கழிக்க முடியும் என விடுவிக்கப்பட்டார். 

இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உள்ளக பங்கு வரலாற்றில் வழங்கப்பட்ட நீண்ட கால தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் சிறைத்தண்டனை அனுபவித்த கால பகுதியில் சிறையில் இருந்து எழுதிய  "Uneven Justice" என்னும் நூல் " விளைந்த நீதி" என  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு  யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 





No comments