ஜப்பான் காதலியுடன் இலங்கை வந்த அமெரிக்க பிரஜை 9mm தோட்டாக்களுடன் கைது!


ஜப்பான் காதலியுடன் இலங்கை வந்த அமெரிக்க பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்க பிரஜையான Pritchett Jermaine Adriun (வயது 38) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

மாலம்பே பகுதியில் உள்ள தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது ஜப்பானிய காதலியுடன் இலங்கை வந்திருந்த  அமெரிக்க பிரஜை , தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் புதன்கிழமை இரவு  , நாடு திரும்பும் நோக்குடன் , கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற வேளை , அங்கு அவரது பயண பையினை சோதனையிட்ட போதே அதனுள் 9 மில்லி மீற்றர் (9MM) ரக தோட்டாக்கள் 10 மீட்கப்பட்டன. 

அதனை அடுத்து அமெரிக்க பிரஜையை கைது செய்த அதிகாரிகள் , மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். 

No comments