கடலட்டை பண்ணை வேண்டும் என கோரி யாழில் போராட்டம்!


கடலட்டைப் பண்ணை வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் ஊடாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்தது. 

பேரணியின் நிறைவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மகஜர் கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. 

கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தினை பெறமுடியாத நிலையில் நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணை தங்களுக்கு வேண்டுமென கோரியே போராட்டத்தில் ஈடுபட்டோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.No comments