முள்ளியவளையில் வர்த்தகர் கழுத்து நெரித்து படுகொலை


முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றினை நடாத்தி வரும் , அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் (வயது 68) என்பவர் கடந்த 22ஆம் திகதி அவரது வர்த்தக நிலையத்தினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவரது சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது , அவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments