இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று அதிகாலை தனது 79வது வயதில் காலமானார்.

இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மிக நீண்ட அங்கத்துவத்தை கொண்டிருந்த அவர், மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த தொழிற்சங்கவாதியான முத்து சிவலிங்கம், பொருளாதார அபிவிருத்தி, சிறு மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments